வீரமே ஜெயம்.. விரைவில் வருகின்றார் மாவீரன் – சிவகார்திகேயன் வெளியிட்ட வீடியோ!

நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து, படிப்பில் கெட்டிக்காரராக இருந்த போதும் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் அவ்வப்போது சிறு, சிறு வீடியோக்களில் நடித்து. அதன் பிறகு Stand Up காமெடியனாக சின்ன துறையில் தோன்றி.
அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் சிவகார்த்திகேயன்.
மெரினா திரைப்படத்தில் கதையின் நாயகனாகவே தோன்றினார், அதன் பிறகு மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதன் பிறகு இவர் நடித்த மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் மற்றும் ரோமியோ போன்ற திரைப்படங்கள் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் மத்தியிலும் சிவகார்த்திகேயனை ஒரு சிறந்த நடிகராக நிலை நிறுத்தியது.
2018ம் ஆண்டு முதல் ஒரு தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் திகழ்ந்து வரும் இவர் தற்பொழுது தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் தான் மாவீரன். இறுதியாக பிரின்ஸ் படத்தில் தோன்றிய இவர் தற்பொழுது இந்த மாவீரன் படத்தின் வெளியீட்டுக்காக தான் காத்திருக்கிறார்.
நேற்று இந்த படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதில் இந்த படத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் எப்படி உருவானது? என்பதை காண்பித்துள்ளனர். மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வெளியாகும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர்.