சிவகார்திகேயன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் – எப்போது இணைவார்கள்?.. கோலிவுட் டாக் என்ன?

தனது திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இருந்து வருபவர் தான் சிவகார்த்திகேயன். கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்துவரும் படங்கள் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வெற்றி கண்டாலும், வியாபார ரீதியாக மந்தமான நிலையிலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில் விரைவில் வெளிவர காத்திருக்கும் அவருடைய மாவீரன் மற்றும் அயாலன் திரைப்படங்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் தற்பொழுது உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன், ஏ.ஆர் முருகதாஸ் அவர்களுடன் இணை உள்ளதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான தர்பார் திரைப்படத்திற்கு பிறகு முருகதாஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை. மேலும் அவர் சிவகார்த்திகேயன் படத்திற்காக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் ஒரு பொது நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன் அவர்களும் ஒரு சிறப்பான விஷயம் உள்ளது அதை விரைவில் கூறுகிறேன் என்று ஒரு தகவலை கூறியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணையுள்ள தகவல் உறுதியாகி உள்ளது மட்டுமல்லாமல் இந்த வருட இறுதியில் அந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.