Search
Search

மாவீரன் படப்பிடிப்பு முடிந்தது – அடுத்து உலக நாயகனுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், இந்த மனிதனுக்கு தமிழக மேடையில் அறிமுகம் தேவையில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு விஸ்வரூப வளர்ச்சி. படிப்பில் கெட்டியாக இருந்த அதே வேலையில் நடிப்பிலும் தனது ஆர்வத்தை செலுத்தி ஒரே மனிதர் இவர் என்றே கூறலாம்.

சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின் அந்த ஷோக்களுக்கே தொகுப்பாளராக உயர்ந்தவர் இவர். இறுதியாக 2013ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியன் மெரினா படம் இவர் நடந்த பாதையை இன்னும் வெளிச்சமாக்கியது.

இந்த 10 ஆண்டுகால பயணத்தில் பல படங்கள் என்பதை தாண்டி டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது தான் மிகப்பெரிய விஷயம். சறுக்கல் பல சந்தித்தபோதும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி நாயகனாக வலம்வருகின்றார் இவர்.

இந்நிலையில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில், அந்த படத்திற்கான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. மேலும் சிவாவிற்கு அடுத்து வெளியாகவிருக்கும் படமும் அதுதான். மேலும் அடுத்தபடியாக ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அடுத்த படத்தில் தற்போது நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமல் அவர்களின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே STRன் 48வது படத்தையும் ராஜ் கமல் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

You May Also Like