‘சிவகுமாரின் சபதம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளிவந்தது.

மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி உள்ளார். பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி.

2017ம் ஆண்டு வெளிவந்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் ஹிப்ஹாப் ஆதி. மேலும் இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.

tamil cinema news

மீசையை முறுக்கு படத்தை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

Advertisement

ஹிப்ஹாப் ஆதி தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘சிவகுமார் பொண்டாட்டி’ எனும் பாடல் நாளை (ஜூலை 2) வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.