சிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி

பாலியல் புகார் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களும் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் சிறையிலிருந்த சிவசங்கர் பாபாவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே போலீசார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிவசங்கர் பாபாவிற்கு ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Advertisement