இன்று எடை குறைக்கும் முயற்சியில் பலர் இரவு உணவைத் தவிர்ப்பதை தேர்வு செய்கிறார்கள். இது “இடைப்பட்ட உண்ணாவிரதம்” (Intermittent Fasting) அல்லது “நேர கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறையாக” (Time-Restricted Eating) medical world-ல் அழைக்கப்படுகிறது. ஆனால், ஒரு மாதம் முழுவதும் இரவு உணவை தவிர்ப்பது உங்கள் உடலுக்கு பல வகையான உடல் மற்றும் மன பரிசோதனைகளை ஏற்படுத்தும், என்கிறார் டாக்டர் ட்வின்சி அன் சுனில், பெங்களூரு அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்.
இரவு உணவை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் உடனடி மாற்றங்கள்
- எடை இழப்பு
இரவு உணவை தவிர்ப்பதால், உடலுக்கு குறைவான கலோரி கிடைக்கிறது. இதனால் உடல் சேமித்துள்ள குளுக்கோஸை (Glycogen) ஆற்றலாக பயன்படுத்துகிறது. இது குறையத் தொடங்கும்போது, தானாகவே எடை குறைய ஆரம்பிக்கிறது. - மயக்கம், சோர்வு, எரிச்சல்
இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் குறைவு ஏற்படும். இதனால் சிலர் மயக்கம், மன உளைச்சல் மற்றும் சரியான தூக்கமின்மை போன்றவற்றை அனுபவிக்கிறார்கள். - பசியின் அளவு அதிகரிக்கிறது
பசியை தூண்டும் ஹார்மோன் Ghrelin அதிகரிக்கிறது, இது உங்கள் மூளையையும், உணவுத் தேவையை அதிகமாக உணர வைக்கிறது.
நீண்டகால சுகாதார பாதிப்புகள்
ஊட்டச்சத்து குறைபாடுகள்
ஒரு முக்கியமான உணவைத் தவிர்ப்பது, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்.
தசை இழப்பு
கலோரி மற்றும் புரதம் இல்லாமல் உடல் தசைகளை எரிக்க ஆரம்பிக்கிறது. இது தசை இழப்பிற்கு வழிவகுக்கலாம்.
வளர்சிதை மாற்றம் மெதுவாகிறது
நீண்ட கால உணவுக் கட்டுப்பாடு BMR (Basal Metabolic Rate) குறைக்கும். அதன் விளைவாக, எடை குறைக்கும் பணி நெடியதாக மாறும்.
அழுத்தமான உணவுப் பழக்கங்கள்
உணவை தவிர்ப்பது, உணவு மீதான கட்டுப்பாட்டை இழக்க வைக்கும். பிறகு அதிகமாக உண்பதற்கும், உணவு கோளாறுக்கும் வழிவகுக்கும்.
யார் இரவு உணவை தவிர்க்கக்கூடாது?
- குழந்தைகள்
- முதியவர்கள்
- நீரிழிவு நோயாளிகள்
- விளையாட்டு வீரர்கள்
- ரத்த சர்க்கரை குறைபாடுடையவர்கள்
இந்த குழுக்களில் உள்ளவர்கள் இரவு உணவை தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது என டாக்டர் சுனில் எச்சரிக்கிறார்.
மருத்துவ ஆலோசனை மிக அவசியம்
நீங்கள் எந்தவொரு உணவுப் பழக்க மாற்றத்தையும் செய்ய முனைந்தால், உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். குறிப்பாக, ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுத் திட்டம் உங்கள் நோக்குகளை அடைய உதவும், உங்களை பாதிப்பதற்கு அல்ல.
மூளை மற்றும் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்படுமா?
ஆம். இரவு உணவை தவிர்ப்பதால், உடல் ஆற்றல் குறைவடைகிறது. இது உங்கள் மூளையின் செயல்திறனை குறைக்கிறது. ஒருநாளில் தேவையான வேலையை செய்வது கடினமாக மாறும். கவனம் செலுத்த முடியாமை, நினைவாற்றல் குறைதல் போன்றவை ஏற்படக்கூடும்.
முடிவில், இரவு உணவை தவிர்ப்பது சிலர் எதிர்பார்க்கும் எடை இழப்பை கொடுக்கலாம். ஆனால், இது உடலின் இயல்பான செயல்பாடுகளை மாற்றும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உடலுக்கும், மனநிலைக்கும் ஏற்ற உணவுக் கட்டுப்பாட்டை, மருத்துவ ஆலோசனையோடு தேர்ந்தெடுங்கள்.