இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இரவில் தூக்கம் வருவதே இல்லை. இதனால் நடுராத்திரி வரை விழித்துக் கொண்டு மொபைல் பார்த்து கொண்டு இருப்பார்கள். மனச்சோர்வு, பதட்டம், மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிட துவங்குவார்கள். ஆனால், தூக்க மாத்திரைகளை தினமும் உண்பதால் கண்டிப்பாக உடலில் பல பிரச்னைகள் ஏற்படுத்தும். மாத்திரை எடுத்துக்கொண்டால்தான் தூக்கம் வரும் என்கிற நிலைக்கு தள்ளப்படலாம்.
தூக்க மாத்திரை அதிகமாக எடுத்தால், நீங்கள் மிகுந்த மயக்கம் மற்றும் சோர்வாக இருப்பீர்கள். இது அடுத்த நாளில் செயல்திறனை குறைக்கலாம்.
தூக்க மாத்திரை அடிக்கடி எடுத்து கொள்வதால் சுவாசக் கோளாறுகள் வர வாய்ப்புள்ளது. நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்க மாத்திரைகள் உண்ணவே கூடாது.
மிக அதிக அளவு எடுத்தால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம். இதன் விளைவாக, மூச்சுவிடாமல் போய்விடுதல், இதயத்துடிப்பு அல்லது மரணம் ஆகியவை ஏற்படலாம்.
தூக்க மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் பலருக்கு தோல் அரிப்பு, நெஞ்சுவலி, குமட்டல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.