மிகச் சிறிய அளவில் கம்ப்யூட்டர் விரைவில்

எலைட் குரூப் கம்ப்யூட்டர் சிஸ்டம்மிகச் சிறிய அளவிலான ஒருகம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது இந்தியாவிலும்அறிமுகம் செய்யப்போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்டோஸ்10 ஓஎஸ் கொண்ட  இதன் விலை இந்தியரூபாயின் மதிப்பின்படி ரூபாய் 15550/-  (ஓஎஸ் இல்லாமல் ரூ.13500 /- க்கு வாங்கிக் கொள்ளலாம்)
இதில் என்னென்ன இருக்கிறது?
 
இந்த கம்ப்யூட்டரின் மொத்த அளவு வெறும்70x70x31.4மிமீ தான். இதில் உள்ளமானிட்டரை தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளலாம்.
தேவையில்லையென்றால் அதை மறைத்து வைத்துக்கொள்ளும்வசதி இதில் உள்ளது.
 
இதில்உள்ள இசை மற்றும் பொழுதுபோக்குஅம்சங்கள் 4K தரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

4GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வசதி உள்ளது. 128GB வரைமெமரி கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ப்ளூடூத் v 4.1 மற்றும் இரண்டு USB வசதிகளும்உண்டு.

 
நமது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும்அளவிற்கு மிகச்சிறிய கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்துவதில் பெருமைப் படுவதாக ECS நிறுவனம்தெரிவித்துள்ளது.