துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு நடிகர் சோனு சூட் கொடுத்த பரிசு

சமூக வலைதளங்கள் வழியாக பலருக்கும் பல உதவிகளைச் செய்து, ரியல் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார் நடிகர் சோனு சூட். மேலும் அவர் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாக ஏழைகள், மாணவர்கள், ஆதரவற்றோர் உள்ளிட்ட பலருக்கும் அவர் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொனிகா லயக் என்ற வீராங்கனை வெற்றிபெற்று வெள்ளி மற்றும் தங்கப்பதக்கம் வென்றார்.

tamil news online

துப்பாக்கி விலை ரூ.3 லட்சம் என்பதால் சொந்தமாக துப்பாக்கி வாங்குமளவுக்கு வசதி இல்லாததால் பயிற்சியாளர்களிடம் இருந்து துப்பாக்கி பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

Advertisement

சில மாதங்களுக்கு முன்பு கொனிகா லயக் ட்விட்டரில் சோனு சூட்டின் ஐடி உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களின் ஐடியை டேக் செய்து தனக்கு துப்பாக்கி வாங்கித் தந்து உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்த சோனு சூட், துப்பாக்கி வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் சோனு சூட் கொனிகா லயக்குக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்துள்ளார். ”ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கப் பதக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு இப்போது பிரார்த்தனை தேவை” என்று கொனிகா லயக் சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.