எம்.பி. சீட்டை ஏற்க மறுத்த ரியல் ஹீரோ சோனு சூட்

பிரபல இந்தி நடிகர் சோனுசூட் தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர். கொரோனா ஊரடங்கின் போது நடைபயணமாக சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து அனைவரின் கவனத்தை பெற்றார்.

அதன் பிறகு விமானம் இல்லாமல் வெளிநாடுகளில் தவித்து வந்த மாணவர்களை தனி விமானம் அனுப்பி அழைத்து வந்தார். மேலும் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதிகளோடு வேலை வாய்ப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார். இப்படி பல உதவிகளை செய்து வரும் சோனு சூட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tamil Cinema News

இந்நிலையில் சோனுசூட்டை எம்.பி. ஆக்க முயற்சி நடந்ததாகவும், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

இது தொடர்பாக சோனு சூட்டுக்கு நெருக்கமானவர்கள் கூறிய போது “சோனுசூட் செய்த சமூக நலப்பணிகளால் ஈர்க்கப்பட்ட ஒரு மாநில அரசு அவருக்கு ராஜ்ய சபை எம்.பி. சீட் வழங்க முன்வந்தது. ஆனால் சோனுசூட் அந்த வாய்பை பணிவோடு நிராகரித்தார். எந்த அரசியல் அமைப்பிலும் சார்ந்து இருக்க விரும்பவில்லை.

அரசியல் கட்சிகள் சாயல் இல்லாமல் தனது பணிகளை தொடர விரும்புகிறேன் என்று சொல்லி வேட்புமனு தாக்கல் செய்ய மறுத்துவிட்டார்” என்று கூறினர்.