வருகின்றது சூதுகவ்வும் பார்ட் 2.. Cameoவில் மக்கள் செல்வன் – அப்போ ஹீரோ யாரு?

சூது கவ்வும், நலன் குமாரசாமி இயக்க C.V. குமார் தயாரித்து வெளியிட்ட திரைப்படம், இன்று தமிழ் சினிமா வியந்து பார்க்கும் மக்களின் செல்வன் விஜய்சேதுபதிக்கு பெயர் பெற்று தந்த படங்களில் இதுவும் ஒன்று. படம் வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டது என்றாலும் இனமும் பல பேரின் செல்போனில் அந்த ரிங்க்டோன் உள்ளது.
இந்நிலையில் யங் மங் சங் படத்தை இயக்கி வெளியிட்ட எம் எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாக உள்ளது சூது கவ்வும் படத்தின் பாகம் இரண்டு. மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஷிவா நடிக்கவுள்ளார், மூத்த நடிகர்கள் சத்தியராஜ் மற்றும் ராதாரவி, கருணாகரன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
மேலும் மக்கள் செல்வன் இந்த படத்தில் ஒரு cameo ரோல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த CV குமார் அவர்கள் தான் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். மேலும் ஏப்ரல் 17 இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது.