சூர்யாவின் சூரரைப்போற்று ஹிந்தியில் வெளியாவதில் சிக்கல்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று ஓ.டி.டியில் ரிலீசானது. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது என்றும் இதையும் சுதாவே இயக்குகிறார் என்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் அறிவித்தது.

cinema news in tamil

சூரரைப்போற்று படத்தை தமிழில் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சிக்யா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த குநீத் மொங்கா என்பவர் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை விற்றதில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தன்னுடன் ஆலோசனை செய்யாமல் நடிகர் சூர்யா தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் நட்பு ரீதியாக சுமுகமாகப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இதனால் தமிழில் சூப்பர் ஹிட்டான சூரரைப்போற்று திரைப்படம் ஹிந்தியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.