சூரரைப் போற்று திரை விமர்சனம்

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த படம் சூர்யா நடித்த சூரரைப் போற்று. கொரோனா தொற்று காரணமாக இந்த படம் திரையரங்கில் வெளிவராமல் OTT இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சூர்யா, காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி, மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு விமானத்தை அத்துமீறி தரை இறக்குகிறார் சூர்யா. அங்கிருந்து படத்தின் கதை தொடங்குகிறது.

Advertisement

மதுரை சோழவந்தானை சேர்ந்த சூர்யா, ஏழைகளும் குறைந்த விலையில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு விமான நிறுவனத்தை துவங்குகிறார். அதே நேரத்தில் விமானத்துறையில் முன்னோடியாக இருக்கும் பரேஷ் ராவல் சூர்யாவின் கனவை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறார்.

இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி சூர்யா தனது கனவை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பது தான் சூரரைப்போற்று படத்தின் கதை.

சூரரைப்போற்று படத்தின் மூலம் சூர்யாவுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. படம் முழுக்க சூர்யா வலம் வருகிறார். நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற யோசனை சூர்யாவுக்கு எப்படி வந்தது? என்று காட்டும் இடம் அருமை. எளிய மக்களுக்காக சூர்யா பேசும் வசனங்கள் அருமை.

உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை பார்ப்பதற்காக பணம் இல்லாமல் பிச்சை எடுக்கும் காட்சியில் அசத்தியிருக்கிறார். படத்தில் வில்லன் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை என்றாலும் சூர்யா தனது நடிப்பின் மூலம் நம்மை கட்டிப் போட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.