சோப்பு நிறுவனங்களுக்கு சபாஷ்.. கொரோனாவை தடுக்க அதிரடி முடிவு..!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான தடுப்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு இதற்கான பணிகளில் மூழ்கி இருந்தாளும், பல்வேறு பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் போன்ற தங்களால் முடிந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சோப் உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்பு பொருட்களின் விலையை குறைத்து, உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாக, நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

Advertisement

இந்த அறிவிப்பை, ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோத்ரேஜ் கன்ஸ்யூமர், பதஞ்சலி ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் ஆரோக்கிய பராமரிப்பு பொருட்களின் விலையில், 15 சதவீதத்தை குறைக்க இருப்பதாகவும், பதஞ்சலி நிறுவனம், 12.5 சதவீதம் குறைக்க இருப்பதாகவும், கோத்ரேஜ் நிறுவனம் அதன் விலை அதிகரிப்பை நிறுத்தி வைத்து, பழைய விலையிலேயே தொடர இருப்பதாகவும் அறிவித்துள்ளன.