Search
Search

சுரைக்காய் தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

Sorakkai payangal in Tamil

சுரைக்காய், மனிதனின் உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்களில் இதுவும் ஒன்று. இதன் தாவரவியல் பெயர் லஜெனரியா சிசெரரியா. இதன் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

உடலுக்கு சத்து

சுரைக்காயில் நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3%, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் தர கூடியவை.

சூட்டை குறைக்கும்

சுரைக்காய் சாப்பிடுவதால் உடல் வெப்பம் குறையும், தோலை பாதுகாக்கும்.

சிறுநீரகத்தை பாதுகாக்கும்

சுரைக்காயில் ரசம் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.மேலும் சிறுநீர் நன்றாக வெளியேறும். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு போன்றவைகளை குணப்படுத்தும்.

suraikai juice benefits in tamil

நாவறட்சியை போக்கும்

வறுத்த உணவுகளை அதிகம் உண்பதால் நாவறட்சி உண்டாகும். அதற்கு, பச்சையான சுரைக்காய் ரசம் வைத்து, ஒரு கப் அளவிற்கு எடுத்து அதி ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடித்தால் நாவறட்சி சரியாகும். உப்பு போடாமல் இந்த ரசத்தை குடிக்கக் கூடாது.

பித்தத்தைக் போக்கும்

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அடிக்கடி எடுத்துக் கொண்டால் பித்தம் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். மேலும், நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை அளித்து உடலை வலுப்படுத்தும்.

கண்ணை பாதுகாக்கும்

கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் கலந்து எடுத்துக் கொண்டால் கண்களுக்கு நல்லது.

தூக்கமின்மையை போக்க

சுரைக்காயின் இலைகளைச் சமைத்து சாப்பிடலாம். அல்லது, சுரைக்காய்ச் சாறு மற்றும் நல்லெண்ணெய் கலந்து இரவு படுக்கைக்கு முன் தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்தால் தூக்கம் நன்கு வரும்.

குடலை பாதுகாக்கும்

தினமும் ஒரு வேளை சுரைக்காய் உணவில் எடுத்துக் கொண்டால் குடல் புண்கள், மலச்சிக்கல், மூலநோய் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. உணவு நன்கு செரிமானம் ஆகும்.

கல்லீரல் பாதுகாப்பு

தினமும் உணவில் சுரைக்காயினை சேர்ப்பதால் அது கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த கிருமிகளை அழிக்கிறது.

இது போன்று மருத்துவம் மற்றும் காய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

You May Also Like