வானில் தோன்றிய மர்ம பொருள்..! பதற்றமடைந்த ஜப்பான் மக்கள்..!

ஜப்பானில் உள்ள சென்டாய் என்ற நகரில், கடந்த புதன்கிழமை அன்று வெள்ளையாக பலூன் போன்ற உருவம் ஒன்று வானில் தெரிந்துள்ளது.

இதனைப்பார்த்த பலர் அந்த மர்ம பொருள் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சியில் இருந்தனர். இதையடுத்து, அந்த பொருளை ஒருவர் புகைப்படம் எடுத்த இணையத்தில் பதிவிட்டார்.

மேலும், இது என்னவென்று கூற முடியுமா எனவும் அவர் கேட்டிருக்கிறார். இதையடுத்து, இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலானது.

Advertisement

மேலும், புகைப்படத்தில் இருக்கும் மர்ம பொருள் என்ன என்றும் பலர் ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வந்தனர். ஒரு சிலர், அரசாங்கம் ஏதேனும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கும் என்று கூறி வந்தனர்.

பின்னர், இந்த புகைப்படம் அரசின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர்களுக்கு என்னவென்று புரியவில்லை. ஒரு சிலர், இது வேற்றுகிரகவாசிகளின் விண்கலம் என்று தகவல்களை பரப்பி வருகின்றனர்.