in

முட்டாள்தனமா பண்ணாதீங்க.. எஸ்.ஜானகியால் கோபமடைந்த SPB..!

தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடகி எஸ்.ஜானகி.

வயது மூப்பின் காரணமாக பாடுவதை நிறுத்தி விட்ட இவர், தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், எஸ்.ஜானகி உயிரிழந்துவிட்டதாக கூறி தகவல் பரவி வந்தது. ஜானகியின் மகன் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கிடையே, பாடகர் எஸ்.பி.பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எஸ்.ஜானகி உயிரிழந்தது தொடர்பான வதந்திக்கு மிகவும் கோபமடைந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.