Search
Search

ரவீந்தர், மஹாலட்சுமி ஜோடி : வீட்டில் தடபுடலாக நடந்த பூஜை – காரணம் இதுதானா?

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரனுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. வெளிநாட்டில் தனது படிப்பை முடித்த ரவீந்தர், IT வேளையில் பெரிய அளவில் நாட்டமில்லாத காரணத்தால் படங்கள் மீது தனது ஆர்வத்தை திருப்பினார்.

FAT MAN FACTS என்ற youtube சேனல் மூலம் தனது சினிமா குறித்த கருத்துக்களை பகிர்ந்து வரும் அவர், அண்மையில் தொகுப்பாளினி மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால் சர்ச்சை எழுந்தது.

திருமணம் என்பது இருவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதை தாண்டி, இந்த ஜோடிக்கு விமர்சனங்கள் வலுத்த நிலையிலும் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் தனது வீட்டில் நடந்த ஒரு சிறப்பு பூஜை குறித்து அவர் கூறியுள்ளார். “இது எங்கள் வீட்டில் நடைபெறும் சந்தி ஹோமம், இது மிகப்பெரிய மற்றும் சிறந்த ஹோமங்களில் ஒன்று. நம்மை நம்பி, அளவற்ற அன்பு செலுத்தும் அனைவருக்காகவும் இந்த பிரார்த்தனை நடைபெறுகிறது”, என்று கூறியுள்ளார்.

You May Also Like