in

உங்களுடைய விந்தணுக்கள் ஆரோக்கியமாக உள்ளதா?..தெரிந்து கொள்வது எப்படி?

சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை.

ஆரோக்கியமில்லாத விந்தணுக்களைக் கொண்டு ஒருபோதும் ஆண்களால் கருவை உருவாக்க முடியாது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பின் அளவு ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும். என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களுடைய விந்தணுக்கள் வெள்ளை அல்லது வெளிர் சாம்பல் நிறத்தில் இருந்தால் அது ஆரோக்கியமான விந்தணுக்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருந்தால் விந்தணுக்களில் நோய்த்தொற்று இருக்க வாய்ப்புள்ளது.

இறுக்கமான உள்ளாடைகளை அணிவது விந்தணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் தளர்வான உள்ளாடைகளை அணிபவர்களாக இருந்தால் உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

சுறுசுறுப்பான ஆரோக்கியமுள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள் தரமானதாக இருக்கும். எனவே விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
சிகரெட் பிடிப்பதால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் கூட பாதிக்கும். புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பற்றி கவலை பட தேவையில்லை.