தண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ

டெல்லியில் ஒரு ஆணும் சிறுமியும் கையில் தண்ணீர் பாட்டிலுடன் நடந்து செல்கிறார்கள். தண்ணீர் தாகத்தோடு இருக்கும் ஒரு அணில் அவர்களை கண்டதும் பின்னாடியே வந்துள்ளது. இரண்டு முன்னங்கால்களை தூக்கிக்கொண்டு எனக்கு தண்ணீர் கொடு என்று கூறுவதுபோல் கேட்டுள்ளது.

அணிலின் இந்த செயலை பார்த்த அந்த நபர் தன் பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை அணிலுக்கு கொடுத்துள்ளார். தண்ணீர் கிடைத்த மகிழ்ச்சியில் போதுமான அளவு தண்ணீரை குடித்ததும் அங்கிருந்து சென்றுவிட்டது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.