இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து : 6 பேர் பலி

இலங்கையின் கிழக்கு மாகாணமான திரிகோணமலையில் உள்ள ஒரு பகுதியில் படகு ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த படகில் பள்ளி மாணவர்கள் உட்பட 20 பேருக்கும் மேல் பயணம் செய்தனர். இந்நிலையில் படகு கிண்ணியா நகர நெருங்கிய போது எதிர்பாராத விதமாக நீரில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

latest tamil news

இதனால் படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்த இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement