நெஞ்சை உலுக்கிய ரஹ்மான் கதறி அழுத வீடியோ – கண்கலங்கிய எஸ்பி செய்த உதவி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரின் போரி கதால் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ரஹ்மான், அவருக்கு வயது 90, இவர் கடலை விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சுமார் 1 லட்சம் ருபாய் பணத்தை அப்துல் ரஹ்மான் தன்னுடைய இறுதிச் சடங்குக்காக சேர்த்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில், சில தீய எண்ணம் கொண்ட மர்ம நபர்கள் ரஹ்மான் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மட்டுமல்லாமல் அவரை கடுமையாக காயப்படுத்தியுள்ளனர்.

பணம் திருடு போன கவலையில் ரஹ்மான் கதறி அழுத வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Advertisement

இந்த வீடியோவை சீனியர் எஸ்பி சந்தீப் செளத்ரி பார்த்து கலங்கிய சந்தீப் செளத்ரி அப்துல் ரஹ்மானுக்கு தன் சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். காவல்துறை எஸ்பி செய்துள்ள இந்த மிகப்பெரிய உதவி பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srinagar police chief wins hearts, pays Rs 1L from his own pocket to old man who was robbed

அதோடு, இந்த செய்தியை அறிந்த ஸ்ரீநகர் மாநகரின் மேயர் பர்வைத் அகமது காத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஹ்மான் புகைப்படத்தை வெளியிட்டு ‘ஒரு எளிய மனிதருக்கு மனித நேய உதவியை செய்துள்ளார் காவல்துறை எஸ்பி சந்தீப் செளத்ரி. வெறும் கடலைகளை வைத்து பிழைத்தவருக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி சிறப்பாக கிடைத்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.