Search
Search

“இந்த லுக் எப்படி இருக்கு” : தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்த STR – உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் திரை உலகில் தங்களை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குனர்களின் பட்டியலில் ஒரே ஒரு படத்தை எடுத்து இணைந்தவர் தான் தேசிங் பெரியசாமி. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படமாகும்.

ஏற்கனவே துல்கர் சல்மானுக்கு தமிழில் இருக்கும் ரசிகர்களை அந்த திரைப்படம் இன்னும் அதிகரித்தது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி, பிரபல இயக்குனர் விக்ரமன் அவர்களுடைய மகளை மணந்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளார் இதில் நம்ம STR தான் ஹீரோ என்பதை நாம் அறிவோம்.

ஏற்கனவே பத்து தல படத்திற்காக நீண்ட முடியும், பெரிய தாடியும் கொண்டு சூப்பர் கெட்டப்பில் இருந்த சிம்பு தற்போது தனது 48வது படத்திற்காக தாடியை குறைத்து நீண்ட முடியுடன் வேற லெவல் ஸ்டைல் லுக்கில் உள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்தபிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே தொலைபேசியில் அழைத்து தனக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று தேசிங்கு பெரியசாமியை கேட்கும் அளவிற்கு மிக அற்புதமான திரைப்படத்தை கொடுத்தவர் அவர்.

ஆகையால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது என்று கூறலாம். தேசிங்கு பெரியசாமி மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு இது ஒரு மாபெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

You May Also Like