நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிறுநீர் கழிக்கும் நூதன போராட்டம்

பொதுவாக போராட்டம் என்றாலே முற்றுகையிடுவது, உண்ணாவிரதம் இருப்பது, கருப்புக் கோடி ஏந்துவது இப்படித்தான் இருக்கும்.

இந்நிலையில் கழிவறைகளை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிறுநீர் கழிக்கும் நூதன போராட்டம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் சுமார் 15 பேர் அடங்கிய ஸ்ரீ ராம சேனா குழுவினர் நகரப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறுநீர் கழிக்கும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று நகராட்சி அலுவலகம் வந்த அவர்கள் வளாகத்தினுள் சிறுநீர் கழித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களை களைத்துள்ளனர். 10 நாட்களுக்குள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் இதையே செய்வோம் என ஸ்ரீ ராம் சேனா குழுவினர் எச்சரித்துள்ளனர்.