ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற மாணவி உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயதான மாணவி நபாத். இவர் தனது ஆண் நண்பருடன் ரயில்வே தண்டவாளத்தின் அருகே நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த விரைவு ரயில் அவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளது. இதில் ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டமாணவி நபாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இவருடன் வந்த ஆண் நண்பர் பலத்த காயங்களுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த கோழிக்கோடு இரயில்வே போலீசார் மாணவியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

செல்ஃபி மோகத்தால் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி விட்டது.