படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க, பேருந்தில் கதவுகள் அமைக்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, ஆயந்தூர், ஆ.கூடலூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு படிக்க நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் போதிய பஸ் வசதி இல்லாத சூழலில் வேறு வழியின்றி அரசு பேருந்தில் தொங்கியபடி விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணிப்பதால் தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தகுந்த விழிப்புணர்வோடு அறிவுரை கூறி வழிநடத்திட வேண்டுமென அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், எதனெனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக அரசு பேருந்துகளில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் பேருந்துகளை கள ஆய்வு செய்து பேருந்து படிக்கட்டுகளில் கதவுகள் அமைக்கப்பட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.