அரசு பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டம். என்ன காரணம்?

பணி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி திண்டுக்கல்லில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

latest tamil news today

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்து ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினார்கள். இந்நிலையில் நேற்று மதியம் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் பேருந்து இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்ல வேண்டிய 18 பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Advertisement

மதியம் முதல் மாலை வரை பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்து அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததால் மாலை 6 மணிக்கு டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். அதன் பின்னரே பஸ்கள் இயக்கப்பட்டன.

திண்டுக்கல்லில் நிறுத்தம் அதிகமுள்ள வழித்தடம், கூடுதல் பணி என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பணியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.
இதனால் மனஅழுத்தத்துடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. இனிமேலும் தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஐ.டி.யூ மண்டல பொதுச்செயலாளர் ராமநாதன் கூறியுள்ளார்.