திடீரென மயங்கிய வைரஸ் தடுப்பு ஊழியர். அரை மணி நேரமாக கண்டுகொள்ளாத ஊழியர்கள்

மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். கீழே விழுந்த அவரை காப்பாற்றுவதற்கோ உதவி செய்வதற்கோ யாரும் முன்வரவில்லை. அதாவது அவருடன் பணியாற்றும் நபர்களே முன்வரவில்லை.

அவர் மயங்கிய நிலையில் கிட்டத்தட்ட 30 நிமிடம் அந்த இடத்திலேயே கேட்பாரற்று கிடந்தார். அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை மீட்டு சென்றனர்.

இந்த படம் இணையதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்து அனைவரும் கேட்கும் கேள்வி எங்கே போனது மனிதம் என்றே.

Advertisement