Search
Search

மாதவன் வீட்டு வத்தக்குழம்பு.. 20 ஆண்டுகால நட்பை கொண்டாடிய சுதா கொங்கரா!

சுதா கொங்கரா, தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து சொல்லி அடிக்கும் ஒரு பெண் சிங்கம். இவர் இயக்கத்தில் தமிழில் முதலில் வெளியான திரைப்படம் துரோகி. அந்த படம் வியாபார ரீதியாக பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றபோது விமர்சன ரீதியாக நல்ல இடத்தை பிடித்தது.

பிரபல இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் இயக்குநராக உருவெடுத்தவர் தான் சுதா கொங்கரா. 2016ம் ஆண்டு மாதவன் நடிப்பில் இவர் இயக்கி வெளியான திரைப்படம் தான் இறுதிச்சுற்று.

உண்மையில் சுதாவை, தமிழ் சினிமா உற்றுநோக்கியது அந்த படத்தில் தான், மாதவனுக்கு வெகு நாட்கள் கழித்து கிடைத்த ஒரு மாபெரும் வெற்றிப்படம் அது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் கொங்கரா இயக்கி வெளியான திரைப்படம் சூரரை போற்று.

2020ம் ஆண்டில் சூப்பர் ஹிட்டான வெகு சில படங்களில் அதுவும் ஒன்று, தேசிய பெற்றார் சுதா கொங்கரா இந்த படத்திற்காக என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது 20 ஆண்டு நண்பரும் பிரபல நடிகருமான மாதவன் வீட்டில் உணவு உண்டு மகிழ்துள்ளார்.

You May Also Like