சுல்தான் திரை விமர்சனம்

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு, சதீஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பிறக்கும்போதே தன் தாயை இழந்து விடுகிறார் சுல்தான். அதன்பிறகு முரட்டுத்தனமான அடியாட்கள் மூலம் வளர்கிறார் கார்த்தி.

இவருடைய பேச்சுக்கு அனைவருமே கட்டுப்படுகிறார்கள் திடீரென அனைவரையும் நல்ல முறையில் மாற்ற வேண்டும் என கார்த்தி நினைக்கிறார். இன்னொருபுறம் கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் இருக்கும் தனது உரை காப்பாற்ற நினைக்கிறார்.

Advertisement

கார்த்தி எடுத்த முயற்சியில் அனைவரும் திருந்தினார்களா? அவரது ஊர் காப்பாற்றப்பட்டத என்பதுதான் படத்தின் மீதிக்கதை. கார்த்தி இந்த படத்தில் ஒன் மேன் ஷோ வாக வந்துள்ளார். ராஷ்மிகா மந்தனா அழகான கிராமத்து பெண்ணாக வந்து செல்கிறார். மலையாள நடிகரான லால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

யோகி பாபு வழக்கம்போல நம்மை சிரிக்க வைக்கிறார். படத்தில் இரண்டு வில்லன்கள் இருந்தாலும் கதாபாத்திரத்தில் வலு இல்லாமல் போகிறது. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவு மற்றும் சண்டைக்காட்சிகள் வேற லெவல். முதல் பாதியில் புதிய களத்தில் தொடங்கிய கதை இரண்டாம் பாகத்தில் வழக்கம்போல் கமர்சியல் பாதையில் பயணிக்கிறது.