வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் வெயில் – மக்கள் கடும் அவதி

கோடைகாலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கானப்படுவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

டெல்லியில் உள்ள முன்கேஷ்பூர் பகுதியில் வெயிலின் அளவு 120.56 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. நஜாப்கார் பகுதியில் 120.38 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.

Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் பண்டல்சந்த் பகுதியில் 120.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் 115 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளன.