Search
Search

முழுக்க நரைத்த தலை.. வயதோ 72.. ஆனால்.. ரசிகர்களின் ஆர்பரிப்புக்கு மத்தியில் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார்

சில தினங்களுக்கு முன்பு நடிகை மீனா திரையுலகில் அறிமுகமாகி 40 ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் நிகழ்ச்சி ஒரு நடைபெற்றது. இதில் 80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த பல நடிகர் நடிகைகள் வந்து அவரை வாழ்த்தினர்.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா, பொதுவாக தமிழ் சினிமாவில் கதையின் நாயகிகள் பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை. குறிப்பாக தமிழ் பெண்கள் கொண்டாடப்படுவதில்லை என்று ஆதங்கமாக பேசினார்.

அவர் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென அங்கு குடியிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க துவங்கினர். காரணம் அந்த இடத்திற்கு வந்துகொண்டிருந்த ஒரு 72 வயது வாலிபருக்காக. அரங்கம் தொடர்ந்து அதிர அன்று பார்த்த அதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தனக்கே உரித்தான ஸ்டைலில் மாஸ் என்ட்ரி கொடுத்தார்.

தலையில் பாதி முடி இல்லை, இருக்கும் கொஞ்ச முடியும் நரைத்துவிட்டது, ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த காந்தம் எங்கு நுழைந்தாலும் அப்படி ஒரு ஈர்ப்பு. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு (என்னை உளப்பட) இது ஒரு goose bumps தருணம் என்று தான் கூறவேண்டும்.

You May Also Like