Search
Search

NTR 100 விழா.. பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்!

தமிழ் திரையுலகை பொருத்தவரை திரையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி பெரிய அளவில் சாதித்த மனிதர்களின் பட்டியல் ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே தான் இருக்கும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மக்கள் திலகம் அய்யா சிவாஜி கணேசன் தொடங்கி இன்று கேப்டன் விஜயகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் வரை சினிமாவிலும் அரசியல் களத்திலும் மிகப்பெரிய புகழோடு வளம் வருகிறார்கள்.

அதேபோல தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து அதன் பிறகு அரசியலில் மாபெரும் தலைவராக விளங்கியவர் தான் என்.டி ராமாராவ். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா என்ற பாடலில் கிருஷ்ணராக தோன்றி நடித்தவர்.

இந்த ஒரு படம் மட்டுமல்ல, இவருடைய நடிப்புக்கு சான்றாக பல நூறு படங்கள் தெலுங்கு திரை உலகை இன்றளவும் ஆட்டி வைத்திருக்கிறது என்றே கூறலாம். இவருடைய மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா இன்றைக்கு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் என்டிஆர் அவர்கள் பிறந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் NTR 100 என்ற மாபெரும் விழா அங்கு நடத்தப்பட்டுள்ளது. இதில் கோலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அவர்கள் பங்கேற்று பாலகிருஷ்ணா பற்றியும் அவருடைய தந்தை என்.டி ராமராவ் பற்றியும் பல விஷயங்களை பேசி உள்ளார்.

ஒரு சண்டை கட்சியில் ஒரு மனிதன் அடித்து ஒரு ஜீப் 20 அடி பறந்துபோகிறது என்று வைத்துக்கொள்வோம், அதை ரஜினியோ, அமிதாபச்சனோ, சல்மான் கானோ செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் அதை பாலையா செய்யதால் மக்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள். அவருடைய மாஸ் அப்படி என்று கூறி புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த்.

You May Also Like