இணைந்த இரு சூப்பர் ஸ்டார்ஸ்.. ரஜினிகாந்த் போட்ட அசத்தல் ட்வீட் – லால் சலாம் லோடிங்!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
அதேபோல இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தோன்றி நடித்துள்ளார். தனது மகள் இயக்கும் இந்த படத்திற்காக சில நாட்களுக்கு முன்பு அவர் மும்பை சென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது பரபரப்பாக உருவாகி வரும் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. அதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பை வென்று கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் கப்பல் தேவ் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவருடன் இந்த திரைப்படத்தில் பணியாற்றியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது தனக்கு கிடைத்த ஒரு மாபெரும் பெருமை என்று கபில்தேவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.