மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழா : சிறந்த நடிகராக சூர்யா தேர்வு

சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ‘சூரரைப்போற்று’ படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement