“இரண்டாம் பாகத்திற்கு கதை இருக்கு” – சூர்யா 42 : உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம்

தற்போது நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா இயக்கி வரும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகின்றார். அதன் பிறகு மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் ஒரு இதிகாச திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். 6 மாத காலத்திற்கு முன்பு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.
ஆனால் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான ஆடியோ உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது பிரபல sa re ga ma நிறுவனம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்க சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கவுள்ளார்.
இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டூடியோ க்ரீன் தலைமையில் ஞானவேல் ராஜா இந்த படத்தை UV நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.
10 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் குறித்த சில சுவாரசிய தகவல்களை UV நிறுவன தலைவர் BOFTA தனஞ்செயன் வெளியிட்டுள்ளார். சூர்யா 42 படத்தின் இரண்டாம் பாக கதை உள்ளது என்று, ஆனால் முதல் பாகம் முடிந்த பின்னரே அது குறித்து யோசிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் சுமார் 150 நாட்கள் வரை இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவுள்ளதாக ஞானவேல் கூறியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர் மற்றும் பெருமணத்தார் என்ற பெயர்கள் மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அக்காலத்தில் வாழ்ந்த வெவ்வேறு இன மக்களின் பெயர்களாக இருக்கலாமோ என்று எனக்கு ஒரு யோசனை வந்தது.
விரைவில் அதற்கு விடை கிடைக்கும் என்று எண்ணி காத்திருப்போம்!