வெறித்தனமான ஒர்க் அவுட்.. வைரலாகும் புகைப்படம் – கங்குவா படப்பிடிப்பில் சூர்யா!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தாங்கள் நடிக்கும் திரைப்படத்திற்காக, மிக நேர்த்தியாக தயாராகும் நடிகர், நடிகைகள் பலர் இங்கு உண்டு. அந்த பட்டியலில் நடிகர் சூர்யா அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய இடம் எப்போதும் உண்டு என்றே கூறலாம்.
கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் வெறித்தனமான பல ஒர்க் அவுட்டுகளை செய்து அனைவரையும் மிரள வைத்தார் சூர்யா. இந்நிலையில் சுமார் 15 ஆண்டுகள் கழித்தும் அதே உத்வேகத்தோடு தனது அடுத்த படமான கங்குவா படத்திற்கு தயாராகி வருகிறார் அவர்.
அவர் ஒர்க் அவுட் செய்யும் ஒரு புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் தயாரித்து வெளியிட இருக்கும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வந்தது.
இந்நிலையில் அங்கு நடந்து வந்த படபிடிப்பு முடிந்த நிலையில், சில கால ஓய்வுக்கு பிறகு மீண்டும் சூர்யா கங்குவா படப்பிடிப்புக்கு திரும்புவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.