உருவாகும் விடுதலை பாகம் 2.. மிக முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுடைய நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இன்றளவும் பெரிய அளவில் மக்களின் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் தான் விடுதலை பாகம் 1. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறி உள்ளது.
மேலும் இதுவரை காமெடி நடிகராகவும், ஒரு குணச்சித்திர நடிகராகவும் இருந்த சூரியை, முற்றிலும் மாற்றி ஒரு ஆக்சன் ஹீரோவாக இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்து வெற்றியும் கண்டுள்ளார் அவர். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா விஜய் சேதுபதி அவர்களும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில், தந்தை விஜய் சேதுபதியுடனும் இயக்குநர் வெற்றிமாறனுடனும் சூர்யா இருக்கும் புகைப்படம் வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
தந்தையை போலவே சூர்யாவும், ஒரு நல்ல நடிகராக வலம்வருவர் என்ற கருத்து பரவலாக கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது.