26 ஆண்டுகள் கழித்து மீண்டும் வரப்போகிறாரா சின்னராசு?.. அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்!

பிரபல வெற்றி இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூரியவம்சம். 90ஸ் கிட்ஸ் மத்தியில் மாபெரும் வெற்றியைக் கண்ட இந்த திரைப்படத்திற்கு இன்றும் மவுசு அதிகம்.
குறிப்பாக சின்னராசு என்ற அந்த கதாபாத்திரத்தை வைத்து இன்றைய தேதியில் பல மீம்ஸ்கள் வருவதை நம்மால் காண முடிகிறது. “இனி சின்னராச கைல பிடிக்க முடியாது” என்று மணிவண்ணன் பேசும் அந்த வசனம் மிகப்பெரிய மீம் டெம்ப்ளேட்டாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுமார் 26 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் எடுக்க, அதாவது அதன் இரண்டாம் பாகம் உருவாகி அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சரத்குமார் “அந்த படத்திற்கான கதைக்களம் உருவாகும் பட்சத்தில், நிச்சயம் இரண்டாம் பாகம் உருவாகும்” என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை படத்தில் வந்த “வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்” என்ற பாடல் எந்த அளவிற்கு மிகவும் தன்னம்பிக்கையை தூண்டும் ஒரு பாடலாக விளங்கி வருகிறதோ, அதே அளவிற்கு சூரியவம்சத்தில் வரும் “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது” என்ற பாடலும் மிக மிக சூப்பர் ஹிட் ஆன பாடல்களில் ஒன்று.