in

ராயப்பனா விஜய் நடிக்க சுஷாந்த் சிங் காரணம்..! அர்ச்சனா கல்பாத்தி பேட்டி..!

பாலிவுட் நடிகர் மனஅழுத்தம் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு, வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என்றும், சுஷாந்த் சிங்கின் வாய்ப்பை அவர்கள் தட்டிப்பறிக்கின்றனர் என்றும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டரில் விஜய் நடிக்க சுஷாந்த் சிங் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறியது பின்வருமாறு:-

“ராயப்பன் கேரக்டர் முதலில் விஜய் நடிக்கவேண்டிய கதாபாத்திரமே கிடையாது. அந்த கதாபாத்திரத்தை, முதலில் வயசான நடிகர் யாரையாவது வைத்து எடுக்கலாம் என இருந்தோம்.

இதற்கிடையே, மைக்கில் கதாபாத்திரத்திற்கான டெஸ்ட் ஷீட் எடுத்து வந்தோம். இதுக்கு, ப்ரீத்தி ஸ்ரீ-னு ஒரு காஸ்மெட்டாலஜிஸ்ட் மும்பைல இருந்து வந்திருந்தாங்க.

அவங்கதான் Chhichhore படத்துல சுஷாந்த் சிங் பண்ற ரெண்டு லுக்கையும் காமிச்சாங்க. அப்பதான் சுஷாந்த் சிங் மாதிரியே ஏன் விஜய் சாரே ரெண்டு ரோல்லயும் நடிக்கக்கூடாதுன்னு தோணுச்சு. இப்படி தான் அந்த கதபாத்திரத்தில் விஜய் நடித்தார்.”

இவ்வாறு அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.