தொலைப்பேசி உரையாடல்கள் தன்னிடம் உள்ளது – பாஜக தலைவரின் பேச்சால் சர்ச்சை

இந்தியாவில் பெகாசஸ் விகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொலைப்பேசி உரையாடல்கள் தன்னிடம் உள்ளதாக அவர் பேசியுள்ளார்.

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதை உறுதி செய்யும் விதமாக சுவேந்து அதிகாரி பேசியிருக்கிறார்.

Advertisement

மம்தாவின் மருமகன் (அபிஷேக் பானர்ஜி) தொடங்கி அவரது அலுவலகத்தில் இருந்து யாரெல்லாம் உங்களை அழைத்தார்கள் என்ற தகவலும் அவர்கள் என்ன பேசினார்கள் என்ற பதிவுகளும் என்னிடம் உள்ளது. உங்களிடம் மாநில அரசு இருக்கிறது என்றால், எங்களிடம் மத்திய அரசு உள்ளது என அவர் பேசியுள்ளார்.

சுவேந்து அதிகாரி மீது கொல்கத்தா காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், இப்படியொரு பரபரப்பு கருத்தை அவர் முன் வைத்துள்ளார்.