முடிவுக்கு வந்த 4 ஆண்டு காத்திருப்பு.. வெளியான டக்கர் பட டீசர் – ஏன் சார் இவ்ளோ லேட்?

சித்தார்த், சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் பையன். MBA பட்டதாரியான இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் அய்யா மணிரத்தினத்தினடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். கன்னத்தில் முத்தமிட்டாள் படம் மூலம் திரையுலகை வந்தடைந்தவர் சித்தார்த்.
கன்னத்தில் முத்தமிட்டாள் வெளியான அடுத்த ஆண்டே, அதாவது 2003ம் ஆண்டே இவர் நடித்து வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் தான் பாய்ஸ். அந்த படத்தின் மூலம் அறிமுகமான பலர், இன்று நல்ல நிலையில் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே.
நடிப்பு, பாடல் மற்றும் டப்பிங் என்று மிகவும் பிசியாக வலம்வரும் சித்தார்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தமான திரைப்படம் தான் டக்கர். டிசம்பர் 9 2019ம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவி, டக்கர் படத்தின் போஸ்டரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியானது, இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த திரைப்படம் வரும் மே மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.