காஷ்மீரை விட மோசமான மாநிலம் தமிழ்நாடு : எச் ராஜா மீண்டும் சர்ச்சை

காஷ்மீரை விட மோசமான மாநிலமாக தமிழகம் மாறி விட்டது என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைத் தளபதி பிபின் ராவத் குறித்து சர்ச்சையான பதிவுகளை வெளியிட்ட யூடியூபர் மாரிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். தமிழக அரசு காஷ்மீரை விட 100 மடங்கு மோசமான, இந்துக்கள் வாழமுடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக பேசியுள்ளார். மேலும் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை இந்து விரோத மீடியாக்கள் என கூறியுள்ளார்.

Advertisement

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட சில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருணாநிதியைவிட ஸ்டாலின் ஆபத்தானவர் என எச் ராஜா ஏற்கனவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது எச் ராஜாவுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதனை தொடர்ச்சியாக செய்து வரும் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.