சென்னையில் மட்டும் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று 12,275 பேருக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டது. இன்று மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 718 பேருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு திரும்பிய 47 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 765 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 833 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 587 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 21 பேருக்கும், திருவள்ளூரில் 34 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement