மியான்மரில் 30 பேர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்று பெட்ரோலை ஊற்றி எரித்த கொடூரம் நடந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடிய போது 1500க்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்றது.

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை ராணுவம் கைது செய்து, சித்திரவதை செய்து, கொலை செய்வதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் மியான்மரின் கிழக்குப் பகுதியில் உள்ள கயா மாகாணத்தில் பெண்கள் சிறுவர்கள் உள்பட 30 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்று அவர்களின் உடலுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Advertisement

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாவது:- மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் ராணுவத்துக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையேயான ஆயுத மோதலில் இருந்து தப்பிக்க மேற்கு பகுதியில் உள்ள அகதி முகாமுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் அவர்களை கைது செய்து, கை கால்களை கட்டி சுட்டுக் கொன்றனர். அதன்பிறகு அவர்களின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததாக அவர் கூறினார்.