அரக்கோணத்தில் தீரன் பட பாணியில் 25 சவரன் தங்க நகை கொள்ளை

அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஆடிட்டர் புஷ்கரன் (25). இவர் கிராமத்துக்கு வெளியே தனக்கு சொந்தமான ஒரு வீட்டில் அவருடைய குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

கடந்த வாரம் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் ஜன்னல் வழியாக சுட்டு அவர்கள் அணிந்திருந்த நகை, வீட்டில் இருந்த 25 சவரன் தங்க நகைகள், 60,000 பணம் என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு வீட்டில் மிளகாய் பொடி தூவி சென்றுள்ளனர்.

நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட நால்வரும் அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

இந்த வழக்கு தொடர்பாக தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பேசியதால் வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என விசாரணை தொடங்கப்பட்டது. அதன் பிறகு உள்ளூர் கொள்ளையர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துஉள்ளனர். இவர்களிடம் இருந்து ஏர் கன், லேப்டாப், கேமரா உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.