கிறிஸ்துமஸ் பண்டிகை : அரசியல் தலைவர்கள் வாழ்த்து

ஏசுபிரான் அவதரித்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 உலகம் எங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதலே தேவாலாயங்களில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என களைகட்டியுள்ளன.

today news in tamil

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “கருணையின் வடிவான இயேசு பிரான் பிறந்த நன்னாளை ஈகையும் அன்பும் பொங்க, சகோதரத்துவத்துடன் கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை மிளிர்ந்து அன்பு தழைக்கட்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “இயேசு பிரான் அவதரித்த தினத்தை கிறிஸ்துமஸ் திருவிழாவாக கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவி, நலமும், வளமும் பெருகட்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். அன்பும், பண்பும், அமைதியும் தழைத்து ஓங்குக!” என அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.