பிரதமர் மோடிக்கு மெது வடையை பார்சல் அனுப்பி போராட்டம்

கரூர் மாவட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்தை உடனடியாக வழங்க வேண்டும் என அந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்.எம்.எஸ் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன் தலைமையில் நடந்த போராட்டத்தில் வாயால் வடை சுடும் பிரதமர் மோடிக்கு உண்மையான வடை அனுப்புகிறோம் என கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேருந்து நிலையத்தில் ஏற்கனவே சுட்டு வைக்கப்பட்டிருந்த 15 மெது வடையை கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிய கவரில் ஒரு வடையையும், பெரிய கவரில் 2 வடையும் போட்டு பிரதமர் முகவரிக்கு அனுப்பப்பட்டது.

Advertisement