தமிழ்ப்படம் 2.0 திரை விமர்சனம்

2010ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் அதேபோன்று தமிழ் சினிமாவை கேலி செய்யும் படம்தான் தமிழ்படம் 2.0
படத்தின் முதல் காட்சியிலேயே இரண்டு கிராமங்களுக்கு இடையில் நடக்கவிருக்கும் கலவரத்தை, தனது மொக்கையான வசனத்தை  பேசிநிறுத்துகிறார் சிவா (சிவா). இதற்குப் பிறகு அவர் காவல்துறையில் துணை ஆணையராக வேலைக்குச் சேர்கிறார்.
“பி” என்கிற மிகப்பெரிய தாதாவை பிடிப்பதற்க்காக பணியிலிருந்து நீக்கப்பட்டதைப்போல நடிக்கிறார்.’பி’ சாகாவரம் பெற்றவன் என்பதால் அவனை கொல்லமுடியவில்லை.அதனால் கடிகாரத்தின் உதவியால் அவனுக்கு சாகாவரம் கிடைக்காமல் செய்துவிடுகிறார். இறுதியில் துணை ஆணையராக பதவி உயர்வு பெறுகிறார். ஹாலிவுட்டில் வந்த படங்கள் டிவி நிகழ்ச்சிகள் என அதையும் விட்டுவைக்காமல் கலாய்க்கப்படுகிறது.
இதுமட்டுமே படத்தின் கதை இல்லை
கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை வைத்து செய்துள்ளார்கள்.
முன்னணிநடிகர்களான ரஜினி,அஜித், விஜய் என ஒரு காட்சியில் கலாய்க்கப்படுகிறார். பிரதமர் மோடியையும் விட்டுவைக்கவில்லை.
திஷா பாண்டே ஒரு காட்சியில் வந்து இறந்துபோய்விடுகிறார். ஐஸ்வர்யா மேனனுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அறிமுகத்தை அளிக்கக்கூடும்
சிவா, முதல் படத்தைப் போலவே இந்தப் படத்திலும் புகுந்து விளையாடியிருக்கிறார்.
மொத்தத்தில் கதைகளை எதிர்பார்க்காமல் சென்றல் செம்ம என்டேர்டைமென்ட் உறுதி