பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2021

மேஷம்

சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உங்கள் முயற்சிகள் படிப்படியாக நிறைவேறும். புதிய அனுபவங்கள் உங்களை தேடி வரும். பணவரவு நன்றாக இருக்கும். தொழிலில் புதிய லட்சியத்தை அடைவதற்கு முயற்சிகளை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டின் இறுதி வரை எதிர்பார்த்த வருமானம் வந்தாலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு பொருளாதார உயர்வு கிடைக்கும். விவசாயிகள் கூடுதல் வருமானத்தை காண்பார்கள்.

ரிஷபம்

உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள். நண்பர்களோடு சேர்ந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

ஐப்பசி மாதத்திற்கு பிறகு நீண்ட நாள் இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கி விடும். வியாபாரத்தை மேம்படுத்த பயணம் செய்வீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அதன் மூலம் வருமானம் வரத் தொடங்கும்.

முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பொறுமையாக யோசித்து செயல்பட வேண்டும். நீங்கள் நினைத்த சுபகாரியங்கள் நடக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வேலையை திறமையாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெறுவார்கள். புதுப் புது வழிகளை கற்றுக் கொள்வார்கள்.

மிதுனம்

இந்தப் பிலவ வருடத்தில் உங்களின் துயரங்கள் அனைத்தும் நீங்கும். உங்கள் வார்த்தைக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும்.

ஆனி மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கார்த்திகை மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பாராத பண வரவு, சொத்து என அனைத்தும் கூடிவரும்.

குடும்பத்தில் வருமானம் உயரும். இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிலநேரங்களில் தூக்கமின்மை, திடீர் செலவு ஆகியவை ஏற்படலாம். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கவனம் தேவை. கார்த்திகை மாதம் விரதம் இருந்து வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கோவிலுக்குச் சென்று வணங்கி வந்தால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இந்த பிலவ வருடத்தில் சில சோதனைகளை சந்தித்தாலும் அது சாதனையாக மாற்றி ஜெயிப்பார்கள். வேலை செய்யுமிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

மாணவர்கள் கல்வியில் அக்கறையோடு இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.

பிள்ளைகளால் சிறுசிறு மன உளைச்சல் ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். காதல் திருமணம் கைகூடும்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் குடும்பத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பு செலுத்துவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகளும் தேடி வரும்.

ஆவணி மாதத்திற்குள் திருமணத்தை முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் மன நிம்மதி கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கணவன், மனைவி ஒற்றுமை நீடிக்கும். சனிபகவான் 6-ம் வீட்டிலேயே இருப்பதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும்.

வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளரின் வருகையை அதிகபடுத்த கடையை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் விலகும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இந்த ஆண்டு பல தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். பிறரிடம் பேசும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அடிக்கடி உடல்நலக் குறைவுகள் வந்து போகலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கல்வி அல்லது வேலை தொடர்பாக வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். திருமண தடை நீங்கும்.

ஆனி மாதத்தில் பணவரவு, வாகன வசதி ஆகியவை கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம். கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டு. பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சனை நீங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் மாங்காட்டில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மனை வணங்கி வந்தால் நல்லது நடக்கும்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அமைதி நீடிக்கும். தேவையற்ற கவலைகள் நீங்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

கார்த்திகை மாதத்திலிருந்து மனமகிழ்ச்சி உண்டு. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஆவணி புரட்டாசி மாதங்களில் குழந்தை பாக்கியம் உருவாகும். உங்களது உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.

சிறு சிறு உடல் நலக் குறைவுகள் வந்து போகலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. வெளியில் சென்று சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆன்மீகம், யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு தீரும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் விலகும்.

பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு தேடிவரும். பணி சுமை குறையும்.

விருச்சகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உருவாகும். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். அதேநேரத்தில் குடும்பத்தில் வருமானம் உயரும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

கணவன் மனைவி இடையே உறவு நீடிக்கும். அடிக்கடி வரும் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். ஆனி மாதத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

சித்திரை வைகாசி மாதங்களில் திருமணம் கூடி வரும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதிய வீடு வாங்குவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள்.

வியாபாரத்தில் இருப்பவர்கள் சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவார்கள். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

சங்கடகர சதுர்த்தி நாளில் ஸ்ரீ கற்பக விநாயகரை வணங்கி வந்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவு நீங்கும். திருமண யோகம் கைகூடி வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். இதனால் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.

வாகனத்தை இயக்கும் போது அதிக கவனத்துடன் இருங்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். அடிக்கடி மன உளைச்சல் வந்துபோகும். பூர்வீக சொத்து விஷயத்தில் பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதி நீடிக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். கடன் தொல்லைகள் தீரும். திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய நட்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நீடிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களையும் கோபத்தையும் விலக்குவது நல்லது. பணம் வரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவுகளும் இருக்கும்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சித்திரை, ஆனி, ஆவணி மாதங்களில் திருமணம் நடைபெறும். ஆடி மாதத்தில் அலைச்சல், செலவுகள் வரலாம்.
வாகனத்தில் செல்லும்போதும் கூடுதல் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

வியாபாரத்தில் நல்ல முடிவு எடுப்பீர்கள். தொழில் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பழைய பாக்கிகள் வந்து சேரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். சம்பளம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி காரர்களுக்கு இந்த ஆண்டு நல்ல மாற்றங்கள் உருவாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கசப்பான உணர்வுகள் விலகும். உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். குழந்தை பாக்கியம் உருவாகும்.பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆவணி மாதத்தில் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

வேலை தேடி அலைபவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பணியிடத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். பாதியில் நின்று போன வீடு கட்டும் பணியை கட்ட ஆரம்பிப்பீர்கள். உங்கள் ராசி அதிபதியான சனி பகவான் இருப்பதால் சுப செலவுகள் நடக்கும். வியாபாரத்தில் புதிய முன்னேற்றம் காணப்படும். வேலையாட்களுக்கு உதவி செய்வீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கூடுதல் சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பணவரவு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். வெளியூர் பயணங்களால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆனி, ஆவணி மாதங்களில் சுப காரியங்கள் நடைபெறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும்.

சகோதர சகோதரிகளால் நிம்மதி கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு விரும்பியபடி சென்று வருவீர்கள்.

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனம் தேவை. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள்.

வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். புதிய திட்டங்களை அமல்படுத்துவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்து வந்த அதிருப்தி விலகும்.